உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல்லுக்கு வந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு

ஒகேனக்கல்லுக்கு வந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு

ஒகேனக்கல்,: தர்மபுரி மாவட்டம், ஏ.ரெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் ராஜசேகர், 40; சிவில் இன்ஜினியர். தன் நண்பர்கள், மூன்று பேருடன் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளார். ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பின்பு, அங்குள்ள தனியார் விடுதியில் இரவு தங்கினார். துாங்கச்சென்ற ராஜசேகர் காலையில் நீண்ட நேரம் ஆகியும் எழவில்லை. அவரை எழுப்ப நண்பர்கள் முயன்றும் முடியவில்லை. உடனடியாக அவரை மீட்டு, பென்னாகரம் ஜி.ஹெச்.,ல் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறினர். இறந்த ராஜசேகருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ