உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பிளஸ் 2 மாணவர்களுக்கு எழுது பொருள்கள் தொகுப்பு

பிளஸ் 2 மாணவர்களுக்கு எழுது பொருள்கள் தொகுப்பு

பிளஸ் 2 மாணவர்களுக்கு எழுது பொருள்கள் தொகுப்புபாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தி.மு.க., சார்பில் எழுது பொருள் தொகுப்பு வழங்கப்பட்டது.பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், 29 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், 2,689 மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 பொதுத்தேர்வையொட்டி, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின், 72வது பிறந்த நாளையொட்டி, தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில், எழுது பொருள்கள் வழங்கும் விழா, பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட செயலாளர் பழனியப்பன் மாணவ, மாணவியருக்கு எழுது பொருள்கள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், சரவணன், பேரூராட்சி தலைவர் மாரி, நகர செயலாளர் ஜெயச்சந்திரன், நிர்வாகிகள் கவுதமன், முல்லை முருகன், தலைமை ஆசிரியர்கள் இளமதி, சாந்தி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை