புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைது
புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைதுஅதியமான்கோட்டை, செப். 8- தர்மபுரி மாவட்டம், பெங்களுரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தடங்கம் அருகே, தாளப்பள்ளம் பிரிவு சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு அதியமான்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த, சுசுகி காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 18 மூட்டைகளில், 163 கிலோ எடை கொண்ட, 1.66 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதில், காரில் வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் மதன்சிங், 36, மற்றும் அவருடன் வந்த அதே பகுதியை சேர்ந்த பாலுசிங், 48 ஆகிய இருவரை, அதியமான்கோட்டை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.