உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வி.சி., கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்

வி.சி., கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்

வி.சி., கட்சி மாவட்டசெயற்குழு கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, செப். 15---விடுதலை சிறுத்தைகள் கட்சி, மகளிர் அமைப்பு சார்பில் அக்., 2ல் மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. இதையொட்டி, கடத்துாரில் மாவட்ட செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலர் பாலையா தலைமையில் நடந்தது. ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் பார்வதி, சத்யா, தீப்பாஞ்சி முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலர் மாயவன் வரவேற்றார். மாநில அமைப்பு செயலர் கோவேந்தன், மாவட்ட செயலர் சாக்கன் சர்மா, மாநாடு மேலிட பொறுப்பாளர் அசோகன், இமயவர்மன், ஜெயந்தி ஆகியோர் மாநாடு குறித்து பேசினர். நிர்வாகிகள் வினோத், ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை