பெண்களுக்கு விழிப்புணர்வு
அரூர், :அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சமூக நலத்துறை சார்பில், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.இதில் சமூக விரிவாக்க நல அலுவலர் மலர்க்கொடி பேசுகையில், சமூக நலத்துறையின் சார்பில், பெண்களுக்கு அளிக்கும் திட்டங்கள் குறித்து விளக்கியதுடன், இதை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார்.