உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி உயிரிழப்பு

மகேந்திரமங்கலம், மகேந்திரமங்கலம் அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே சின்னேகவுண்டஹள்ளியை சேர்ந்தவர் மூக்கப்பன், 70. இவர் பூமாலை கட்டுவதற்கு உதவும், ஊனான் கொடியை பாலக்கோடு, கொலசனஹள்ளி ஆகிய பகுதிகளில் விற்பனை செய்துவிட்டு நேற்று மாலை, 4:00 மணிக்கு வீடு திரும்பி உள்ளார். அப்போது தர்மபுரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற, சொகுசு கார் அதிவேகமாக வந்து மூக்கப்பன் சென்ற பைக்கின் பின்புறம் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மகேந்திரமங்கலம் போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி