பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு நேற்று 291 பேர் ஆப்சென்ட்
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு நேற்று 291 பேர் 'ஆப்சென்ட்'தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், நேற்று நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், 291 மாணவர்கள், 'ஆப்சென்ட்' ஆகினர். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 3ல் தொடங்கியது. இதில் நேற்று, தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், 103 அரசு பள்ளிகள், 4 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, 3 அரசு உண்டு உறைவிடப்பள்ளி, ஒரு சமூக நலப்பள்ளி, 65 தனியார் பள்ளிகள் என, 177 பள்ளிகளை சேர்ந்த, 9,365 மாணவர்கள், 9,971 மாணவியர் என, 19,336 மாணவர்கள் தேர்வெழுத இருந்தனர். 83 தேர்வு மையங்களில் நடந்த தேர்வில், 3,500 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டனர். நேற்றைய தேர்வில், 132 மாணவர்கள், 159 மாணவியர் என, 291 பேர், 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 19,045 பேர் தேர்வெழுதினர். இதில், மாணவியர் அதிகளவில், 'ஆப்சென்ட்' ஆனது குறிப்பிடத்தக்கது.