உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடையால் ஏமாற்றம்

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடையால் ஏமாற்றம்

ஒகேனக்கல்,: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில், 25,000 கன அடி நீர்வரத்தால், காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பிய நிலையில், தமிழகத்துக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 5,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 16,523 கன அடி என, 21,523 கன அடி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை, 6:00 மணிக்கு, 25,000 கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது. இதனால், ஒகேனக்கல் ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகள், காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், மாவட்ட நிர்வாகம் நேற்று தடை விதித்தது. இதனால் விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். ஒரு சிலர் தடையை மீறி, ஆற்றங்கரையோரத்தில் குளித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
செப் 03, 2024 01:03

மழையெல்லாம் நின்னப்புறம் குட்டை மாதிரி தண்ணி தேங்கியிருக்கும். அப்போ வந்து குளியுங்க. தடை ஏதுமிருக்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை