உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சரக அளவிலான கூடைப்பந்து போட்டி

சரக அளவிலான கூடைப்பந்து போட்டி

பாலக்கோடு, ஆக. 24-தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த, சரக அளவிலான கூடைப்பந்து போட்டியை, சி.இ.ஒ., ஜோதிசந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் பரமசிவம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.பள்ளி கல்வித்துறை சார்பில், 14, 17, 19 வயதுக்குட்பட்ட சரக அளவிலான மாணவர் மற்றும் மாணவியருக்கு போட்டிகள் நடந்தன. தலைமை ஆசிரியர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். 14, வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் முதல் இடத்தை பாலக்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, திம்மம்பட்டி செயின்ட்லுாசிஸ் மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். 17 வயதுக்குட்பட்ட போட்டியில், திருமல்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், 19 வயதுக்குட்பட்ட போட்டியில் பெரியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.அதேபோல், 14 வயதிற்குட்பட்ட மகளிர் பிரிவில் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடம், திம்மம்பட்டி செயின்ட்லுாசிஸ் மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடம் பிடித்தது. 17 வயதிற்குட்பட்ட பிரிவில், மாதம்பட்டி ஆர்.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளி முதலிடம், பெரியூர் அரசு உயர்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தை பெற்றனர். 19 வயதிற்குட்பட்ட பிரிவில், பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடம், திம்மம்பட்டி செயின்ட்லுாசிஸ் மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு, சான்றிதழ்கள், கோப்பை வழங்கப்பட்டன. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், உடற்கல்வி ஆசிரியர் ரங்கநாதன், சரக இணை செயலாளர் செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ