வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி: மத்திய அரசு கொண்டு வரவுள்ள, சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாப்பிரெட்டிப்பட்டியில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு சார்பு நீதிமன்றம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் கோபி தலைமை வகித்தார். செயலாளர் கனகராஜ், நிர்வாகிகள் விவேகானந்தன், பெருமாள், குமார் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர் பூவன், மத்திய அரசு கொண்டு வரவுள்ள மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பேசினார். வழக்கறி-ஞர்கள் மணி, கற்பகம், ஞானகுமார் உள்பட பலர் கலந்து கொண்-டனர். வக்கீல் பெருமாள் நன்றி கூறினர்.* பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் உள்ள, மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் முன், நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துசாமி, மூத்த வழக்கறிஞர் அசோகன் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்-கறிஞர் சங்க செயலாளர் வீராசாமி, மூத்த வழக்கறிஞர்கள் சர-வணன், மகாலிங்கம், மாதையன், ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.