உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெண் சிசுக்கள் கருக்கலைப்பு தர்மபுரி அருகே நர்ஸ் கைது

பெண் சிசுக்கள் கருக்கலைப்பு தர்மபுரி அருகே நர்ஸ் கைது

பாப்பாரப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே, கிட்டனஹள்ளியில் கருவில் சிசுவின் பாலினம் கண்டறிந்து, பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்யப்படுவதாக, தர்மபுரி கலெக்டர் சாந்திக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையிலான குழுவினர், கிட்டனஹள்ளி பகுதியில் ஒரு வீட்டில் நுழைந்தனர். அங்கு இருந்த கர்ப்பிணியை விசாரித்தனர்.அவருக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், வயிற்றில் உள்ள சிசுவும் பெண் என தெரிந்ததால், கருக்கலைப்பு செய்ய முயன்றது தெரிந்தது. இதையடுத்து, அவருக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற, சேலம் மாவட்டம், பனமரத்துபட்டியைச் சேர்ந்த சித்ராதேவி, 42, என்பவரை பிடித்து பாப்பாரப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். சேலத்தில், ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் செவிலியராக பணிபுரிவது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ