மேலும் செய்திகள்
சாலையில் தீ பிடித்து எரிந்த கார்
28-Aug-2024
தர்மபுரி, செப். 8- நில உரிமையாளர்கள் இறந்ததை மறைத்து, பத்திரப்பதிவு முறைகேட்டில் ஈடுபட்டவர் மீது, நடவடிக்கை கோரி, தர்மபுரி சார் பதிவாளர், போலீசில் புகார் அளித்துள்ளார். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, ராமியம்பட்டியை சேர்ந்தவர் மாது, 42. இவர், பூமாண்டஹள்ளியில், 38 மற்றும், 41 சென்ட் நிலத்தை, தர்மபுரி பத்திரப்பதிவு அலுவலகத்தில், நவ., 5, 2022 அன்று காலை, 10:00 மணிக்கு நில உரிமையாளர்கள் இருவர் இறந்ததை மறைத்து, லைப் சர்டிபிகேட் பெற்று, வேறொரு நபருக்கு கிரையம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பதிவு சட்டம், 1908 பிரிவு, 83ன் படி, முறைகேட்டில் ஈடுபட்டவர் மீது, நடவடிக்கை எடுக்க, எண், 2 சார்பதிவாளர் பாஸ்கர் புகார் படி, காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
28-Aug-2024