பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1 கிலோ குண்டுமல்லி ரூ.1,600
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பாலகோடு, காரிமங்கலம், கம்பை-நல்லுார், மொரப்பூர், நல்லம்பள்ளி, தொப்பூர், பொம்மிடி உள்-ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்-றனர்.பூக்களை அவர்கள், தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் செயல்-படும் பூ மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர். இங்கு, விற்-பனை செய்யப்படும் பூக்கள் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்செங்கோடு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிக-ளுக்கும் பெங்களூரு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநி-லங்களுக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூக்கள் தேவை அதிகரித்-தது. கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில், நிலவி வரும் பனிப்பொழிவால் பூக்கள் வரத்து குறைந்து, விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம், ஒரு கிலோ குண்டுமல்லி, 1,000 ரூபாய், கன-காம்பரம், 1,200, ஜாதிமல்லி, 700, காக்கடான், 600, பன்-னீர்ரோஸ், 120, பட்டன்ரோஸ், 200, சம்பங்கி, 140, சாமந்தி, 160 என விற்பனையானது.நேற்று மேலும் விலை உயர்ந்து, குண்டுமல்லி ஒரு கிலோ, 1,600 ரூபாய், கனகாம்பரம், 1,200, காக்கடான், 900, ஜாதிமல்லி, 700, சம்பங்கி, 200, பன்னீர் ரோஸ், 160, பட்டன்ரோஸ், 320, சாமந்தி, 220, ரூபாய் என, 15 டன் பூக்கள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.