உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பைக் விபத்தில் விவசாயி காயம்: வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

பைக் விபத்தில் விவசாயி காயம்: வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

கடத்துார்: கடத்துார் அடுத்த தாளநத்தத்தை சேர்ந்தவர் பெரியண்ணன், 60. விவசாயி. இவர் கடந்த, 13 ல் மாலை 7:30 மணிக்கு, தன் வீட்டி-லிருந்து தோட்டத்திற்கு செல்ல தாளநத்தம் - --வேப்பிலைப்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த காவேரிபுரத்தை சேர்ந்த பொக்லைன் டிரைவர் தர்மதுரை, 29, மோதி-யதில், பெரியண்ணன் காயமடைந்தார். அவரது உறவினர்கள் தர்மது-ரையை தாக்கினர். தடுக்க வந்த அவரது உறவினர்களையும் தாக்-கினர். இதில் பெரியண்ணன், தர்மதுரை உள்ளிட்டோர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பெரியண்ணன் மருமகன் முருகன் புகார் படி, தர்மதுரை மீது கடத்துார் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். அதே போன்று, தர்-மதுரை புகார் படி முருகன், 46, அப்புசாமி, 36, பிரதீப், அருள்-சாமி, ஷர்மா, தருண்குமார் ஆகிய, 6 பேர் மீது வழக்குப்பதிந்து, முருகன், அப்புசாமி ஆகிய, இருவரை போலீசார் கைது செய்-தனர். இருதரப்பும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்-பதால், தாளநத்தம் பகுதியில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி