உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

தர்மபுரி; தர்மபுரி மாவட்டம், இண்டூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தமிழரசி நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு ரோந்து சென்றார். அப்போது, கோரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி, 60. அவருடைய தோட்டத்தில் சாராயம் காய்ச்ச, 10 லிட்டர் ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது. சாராய ஊறலை அழித்து, பெரியசாமியை கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், தொப்பூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்-றபோது, கெட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரங்க-சாமி, 58, தன் மாட்டு கொட்டகையில் சாராயம் காய்ச்சி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த,3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ