2 டன் அலுமினிய கம்பிகள் திருட்டு 3 மின்வாரிய அலுவலர்கள் சஸ்பெண்ட்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, 2 டன் மின் கம்பிகளை திருடி கைதான, மின்வாரிய அலுவலர்கள், 3 பேர், 'சஸ்பெண்ட்' செய்-யப்பட்டனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்ததி-லுள்ள மின்வாரிய அலுவலக குடோனில், 2 டன் அலுமினிய மின் கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது. இது தொடர்பாக அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர் தலைமையில் தனிப்படை போலீசார் மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இதில், கடத்துார் மின்கோட்ட அலுவலக பண்டக சாலையிலி-ருந்து எடுத்து வந்த, 2 டன் மின் கம்பிகள் அலுவலகத்திற்கு கொண்டு வராமல், பி.பள்ளிப்பட்டி தனியார் கிழங்கு மில்லில் பதுக்கி வைத்துவிட்டு, திருடு போனதாக அலுவலர்கள் நாடகமா-டியது தெரிந்தது. இதில், மின்வாரிய அலுவலகத்தில் பணி-யாற்றும் இளநிலை பொறியாளர் குமரவேல், 41, தற்காலிக பணியாளர் சிலம்பரசன், 30, மின்பாதை ஆய்வாளர் மரியா லுாயிஸ், 55, வணிக ஆய்-வாளர் வெங்கடாஜலபதி, 46, ஆகியோரை, பொம்மிடி போலீசார் கைது செய்தனர். 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 2 டன் மின் கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கடத்துார் கோட்ட செயற்பொறியாளர் செந்தில்ராஜ் பரிந்துரை படி, தர்மபுரி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி, 2 டன் அலுமினிய கம்பிகள் திருடிய வழக்கில் கைதான இளநிலை பொறியாளர் குமரவேல், 41, மின் பாதை ஆய்வாளர் மரியா லுாயிஸ், 55, வணிக ஆய்வாளர் வெங்கடாஜலபதி, 46, ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.