உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குண்டேரிபள்ளத்தில்55 மி.மீ., மழை

குண்டேரிபள்ளத்தில்55 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் துவங்கிய நாளில் சுட்டெரித்த வெயிலால் மக்கள் அவதியுற்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மாவட்டத்தில் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக குண்டேரிபள்ளத்தில், 55.80 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் மொடக்குறிச்சியில்-2, கொடுமுடி-4, வரட்டுபள்ளம் அணை-4.40, கொடிவேரி அணை-14.20, நம்பியூர்-4, பவானிசாகர் அணை-2.20 மி.மீ., மழை பதிவானது. மழைக்கு சத்தியமங்கலத்தில் நான்கு கான்கிரீட் வீடு சேதமடைந்ததாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.*************************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை