செந்தில் பப்ளிக், மெட்ரிக் பள்ளியில் தேர்வுகளை கொண்டாடும் பெருவிழா
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'தேர்வுகளை கொண்டாடுதல்' என்ற வகையில் அறிவூட்டும் நிகழ்ச்சி பிப்., 4 அன்று நடந்தது.இதில் நடிகர் தாமு பேசினார். இதில், மாணவர்களுக்கு தேர்வு குறித்த கண்ணோட்டத்தை மாற்றும் நோக்கத்துடனும், தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும், தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் தங்களை தயார் படுத்தி கொள்ளும் முறை, நேர்மறையான மனநிலையின் முக்கியத்துவம், தேர்வுகள் கற்றல் பயணத்தின் ஒரு பகுதி மற்றும் கற்றலுக்கு அப்பாற்பட்ட பாடத்தை வழங்கும் நிகழ்வு எனக்கூறி, தேர்வை அச்சமில்லாமல் எதிர்கொள்ள அறிவுரை கூறினார்.நிகழ்ச்சி, செந்தில் பப்ளிக் பள்ளி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் குறித்த ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான அணுகுமுறையை வளர்த்து கொள்ளவும், மாணவர்கள் எதிர்கால வாழ்க்கை சூழல் குறித்து, அறிந்து கொள்ளும் வகையிலும் சிறப்பாக நடத்தப்பட்டது.இதில், செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி, நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர்கள் செந்தில் முருகன், சிவராமகிருஷ்ணன், துணை முதல்வர் ராஜ்குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.