தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சொன்னம்பட்டியை சேர்ந்தவர்கள் சுனில்குமார், 19, மற்றும் முருகன், 20. இவர்கள் கடந்த நவ., 27 அன்று இரவு பைக்கில் பாலக்கோடு நோக்கி சென்றபோது, சிக்கார்தனஹள்ளி நெடுஞ்சாலையில், இருவரும் படுகாயமடைந்து இறந்து கிடந்தனர். அவர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி, உறவினர்கள் பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகை மற்றும் அனுமந்தபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், உரிய விசாரணை நடத்திய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் தெரிவித்தார்.இந்நிலையில், மத்திய ஆதிதிராவிடர் நல ஆணைய இயக்குனர் ரவிவர்மா, ஆராய்ச்சியாளர்கள் லிஸ்டர், சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று பாலக்கோட்டில் விபத்து நடந்த இடம், வாலிபர்கள் பயன்படுத்திய பைக், விபத்து நடத்த இடத்தில் முதலில் பார்த்த சாட்சிகள் மற்றும் வாலிபர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வாலிபர்கள் மரணம் குறித்து உண்மை தன்மையை கண்டறிய, சி.பி.சி.ஐ.டி., விசாரணை வேண்டும் என, அவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.விசாரணையின் போது, தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி, டி.எஸ்.பி.,க்கள் ராஜசுந்தர், சிவராமன், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் டி.எஸ்.பி., சூர்யா, இன்ஸ்பெக்டர்கள் பாலசுந்தரம், சிவசங்கர் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.