உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / . இயற்கை இடுபொருட்கள் குறித்த அட்மா திட்ட பயிற்சி

. இயற்கை இடுபொருட்கள் குறித்த அட்மா திட்ட பயிற்சி

ஏரியூர், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த அரகாசனஹள்ளி கிராமத்தில், இயற்கை இடுபொருள் தயாரித்தல் குறித்த, அட்மா திட்ட பயிற்சி நேற்று நடந்தது.பென்னாகரம் வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் தலைமை வகித்து, வேளாண் சார்ந்த திட்டங்கள் பற்றியும், வேளாண் அடுக்ககம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினார். இயற்கை விவசாயி, சுப்ரமணிய சிவா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தனசேகரன் இயற்கை விவசாயத்தின் நன்மைகள், அதற்கான இடுபொருட்கள் தயாரித்தல், பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினார்.உதவி வேளாண்மை அலுவலர் தமிழ்செல்வி, வேளாண் துறை சார்ந்த திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் அசோக்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் அஸ்வினி மற்றும் கலைபிரியா அட்மா திட்டங்கள் குறித்து விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை