அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்தர்மபுரி, அக். 9-சொத்து வரி, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவைகளை உயர்த்திய, தி.மு.க., அரசை கண்டித்து தர்மபுரியில், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த பேராட்டத்துக்கு, நகர செயலாளர் ரவி மற்றும் அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தனர். இதில், விலைவாசி உயர்வு மற்றும் போதை பொருள் புழக்கத்தை தவிர்க்க தவறிய, தி.மு.க., அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் நாகராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாலக்கோட்டில் நடந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டார். ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கீல் செந்தில், நகர செயலாளர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.* தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டில் நடந்த போராட்டத்திற்கு, அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார் தலைமை வகித்தார். இதில், தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், கம்பைநல்லுாரில் சம்பத்குமார் எம்.எல்.ஏ., தலைமையில், மனித சங்கிலி போராட்டம் நடந்தது.* பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், மனித சங்கிலி போராட்டம் நகர செயலாளர் தென்னரசு தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.,-- கோவிந்தசாமி பேசினார். இதேபோன்று கடத்துார், பொ.மல்லாபுரத்தில் நடந்தது.