மேலும் செய்திகள்
அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
09-Oct-2024
தர்மபுரி, அக். 18-அ.தி.மு.க., 53வது ஆண்டு துவக்க விழா, தர்மபுரி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று, மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. கட்சி கொடியை ஏற்றி வைத்து, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவைத்தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். பின், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நகர செயலாளர் ரவி, கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெற்றிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பாலக்கோடு நகர செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் நாகராசன், முன்னாள் ஒன்றிய செயாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தனர். அங்கிருந்த எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பட்டாசு வெடித்து கட்சி தொண்டர்கள் கொண்டாடினர். ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கீல் செந்தில், முன்னாள் நகர செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் கவிதா, பஞ்., தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.* பாப்பிரெட்டிப்பட்டியில், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமையில், நகர செயலாளர் தென்னரசு முன்னிலையில் கட்சி கொடியேற்றி, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் கட்சி நிர்வாகிகள் புரட்சிதாசன், அழகரசன், ரவி, கென்னடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதேபோன்று, பொம்மிடியில் மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில், நகர செயலாளர் ராஜா முன்னிலையில், கட்சி கொடியேற்றி எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் இளையராஜா, இடும்பன், மாதேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடத்துாரில் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில், அ.தி.மு.க.,வினர் கொண்டாடினர்.
09-Oct-2024