2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெறும்
'2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெறும்'தர்மபுரி, அக். 23-''வரும், 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெறும்,'' என, முன்னாள் அமைச்சர் தங்கமணி பாலக்கோட்டில் நடந்த, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினார்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில், அ.தி.மு.க., வின் பாலக்கோடு தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் சார்பில், செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், பாலக்கோடு, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது. விவசாய பிரிவு மாநில செயலாளர் டி.ஆர்.அன்பழகன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் நாகராசன் வரவேற்றார்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை, தி.மு.க., அரசு புறக்கணித்து மக்களை வஞ்சித்து வருகிறது. வரும், 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெற்று, பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., ஆட்சி அமையும். அப்போது, தி.மு.க., புறக்கணித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்,'' என்றார்.நகர செயலாளர் ராஜா நன்றி கூறினார்.