இ.பி.எஸ்., பிறந்த நாள் கொண்டாடஅ.தி.மு.க., கூட்டத்தில் ஆலோசனை
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, அ.தி.மு.க, கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான இ.பி.எஸ்., 71வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது குறித்தும், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சுமதி ராஜேந்திரன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முனிவெங்கடப்பன், ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.