இ.பி.எஸ்., வருகையையொட்டி அ.தி.மு.க., கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., அடுத்த மாதம், முதல் வாரத்தில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, கடத்துார் வருகை தர உள்ளார். இதையொட்டி, பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியம் சார்பில் பையர்நத்ததிலும், கடத்துார் ஒருங்கிணைந்த ஒன்றியத்தின் சார்பில் கடத்துார் தனியார் மண்டபத்திலும் எம்.எல்.ஏ., --கோவிந்தசாமி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.அரூர் எம்.எல்.ஏ.,- சம்பத்குமார், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, மாவட்ட பிரதிநிதி பொண்ணு வேல், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் அசோகன், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், சேகர், முருகன், நகர செயலாளர்கள் தென்னரசு, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மதிவாணன் வரவேற்றார். இதில், அ.தி.மு.க., அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான- -அன்பழகன் எம்.எல்.ஏ., பேசுகையில்,''தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கடத்துாருக்கு வருகை தரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். வரும், 2026ல் சட்டசபை தேர்தலில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 5 தொகுதிகளிலும், அ.தி.மு.க., அதிக ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெறவும், வரும் தேர்தலில், இ.பி.எஸ்., தலைமையில் ஆட்சி அமையவும் அயராது உழைக்க வேண்டும். இ.பி.எஸ்., கலந்து கொள்ளும் பிரசார கூட்டத்தில், 25,000 பேர் பங்கேற்க வேண்டும்,'' என்றார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் துரை, மாவட்ட நிர்வாகிகள் பெரியகண்ணு, வஜ்ஜிரவேல், தமிழ்மணி, டாக்டர் முருகன், சேகர், கவுன்சிலர் சபியுல்லா, தர்மா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கடத்துார் நகர செயலாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.