உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மா விவசாயிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க., அரசியல் நாடகம்

மா விவசாயிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க., அரசியல் நாடகம்

கிருஷ்ணகிரி, தி.மு.க., அமைப்புசாரா ஓட்டுனரணி மாநில செயலாளர் செங்குட்டுவன் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'மா' சாகுபடி அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 'மா' விலை ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தற்போது விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால், 'மா' விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'மா' விளைச்சலை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் மாம்பழக்கூழ் ஆலை உரிமையாளர்கள், 'சிண்டிகேட்' போட்டு கொள்முதல் செய்யாததாலும், 'கல்தார் மருந்தின்' காரணமாகவும், மாம்பழங்கள் மரத்திலேயே கெட்டு அழுகி வருகிறது. விவசாயிகளின் பாதிப்பை தடுக்க, தமிழக அரசே, 'மா' கொள்முதலையும் துவக்கி உள்ளது. இதை தெரிந்து கொண்ட, அ.தி.மு.க., தேர்தல் நெருங்குவதால் உண்ணாவிரத போராட்டம் என்ற பெயரில், 'தேர்தல் நாடகம்' நடத்த முயற்சிக்கிறார்கள்.கடந்த, 2006, தி.மு.க., ஆட்சியில் மாம்பழக்கூழ் ஏற்றுமதி மையம் அமைக்க, 'கிரிஸ்மா' என்கிற பிராண்டை உருவாக்கி கோப்புகள் தயாரிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டன. 2011 ஆட்சி மாற்றத்திற்கு பின் அந்த திட்டங்களை கிடப்பில் போட்டது, அ.தி.மு.க., அரசு. அப்போதெல்லாம் 'மா' விவசாயிகள் ஞாபகம் வராமல், தற்போது, அ.தி.மு.க.,விற்கு கவலை வந்துள்ளது. அ.தி.மு.க.,வின் இந்த நாடகம் எடுபடாது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ