மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 45வது வார்டு மத்திகிரியில், மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள், தி.மு.க.,வில் இணையும் விழா நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மற்றும் மாநகர செயலாளர் மேயர் சத்யா ஆகியோர் முன்னி-லையில், மாற்றுக்கட்சியில் இருந்து விலகிய, 50க்கும் மேற்-பட்டோர், தி.மு.க.,வில் இணைந்தனர். துணை மேயர் ஆனந்-தய்யா, மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.