மேலும் செய்திகள்
அரூர் இ.ஆர்.கே., பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
11-May-2025
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், -சேலம் சாலை எருமியாம்பட்டியில் செயல்பட்டு வரும் இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களிலுள்ள மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நடந்து முடிந்த, 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில், 2ம் இடமும், மாவட்டத்தில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.மாணவர் கவிபிரியன், மாணவி இனிகா ஆகியோர், 500க்கு, 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில், 2ம் இடம், மாவட்டத்தில் முத-லிடம் பிடித்தனர். இருவரின் பாடவாரியான மதிப்பெண்கள் தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100, மேலும், கணிதத்தில், 18 பேர், அறிவியல், 34 பேர், சமூக அறிவியல், 28 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.மேலும், 490க்கு மேல், 18 பேர், 480க்கு மேல், 26 பேர், 450க்கு மேல், 51 பேர், 400 மதிப்பெண்களுக்கு மேல், 112 பேர் என மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாண-வர்களை, இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்-வராஜ், நிர்வாக இயக்குனர் சோழவேந்தன், தலைமை ஆசிரியர் தீர்த்துமலை, நிர்வாக அலுவலர் அருள்குமார், பொறுப்பாசிரியர் பார்த்திபன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி நினைவு பரிசு வழங்-கினர்.
11-May-2025