உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கூத்தப்பாடிதிரவுபதி அம்மன் கோவிலில் திருட முயற்சி

கூத்தப்பாடிதிரவுபதி அம்மன் கோவிலில் திருட முயற்சி

கூத்தப்பாடி திரவுபதி அம்மன்கோவிலில் திருட முயற்சிபென்னாகரம், டிச. 24- பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியிலுள்ள, 7 ஊருக்கு சொந்தமான திரவுபதி அம்மன் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணிக்கு ஒகேனக்கல் போலீசார் ரோந்து சென்றுள்ளனர். அப்போது, கோவில் மெயின் கதவில் இருந்த பூட்டை உடைத்து விட்டு, உள்கதவை உடைக்க திருடர்கள் முயற்சி செய்துள்ளனர். போலீசாரை பார்த்ததும் தப்பித்து சென்றனர். ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் முரளி, கோவிலுக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த உண்டியலை காணவில்லை. கோவில் அருகே வயலில் உண்டியல் உடைக்கப்படாமல் இருந்துள்ளது. போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !