உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவர்களுக்கு வனம் குறித்த விழிப்புணர்வு

மாணவர்களுக்கு வனம் குறித்த விழிப்புணர்வு

அரூர்; தர்மபுரி மாவட்ட வனத்துறை சார்பில், மொரப்பூர் வனச்சரகம், ஒடசல்பட்டி வனக்காவல் சுற்றுக்கு உட்பட்ட பத்தலஹள்ளி காப்புக்காட்டில், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, இயற்கை சுற்றுலா மற்றும் வனம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.இதில், பங்கேற்ற, 30 மாணவர்களுடன் வனம் மற்றும் வனவிலங்குகளின் முக்கியத்துவம், உணவு சங்கிலியின் முக்கியத்துவம், வனத்தால் கிடைக்கும் நன்மை, வனத்தில் தீ ஏற்படாமல் பாதுகாப்பது எப்படி ஆகிய தலைப்புகளில் கலந்-துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மாணவர்கள் இயற்கை நடைபயணமாக பத்தலஹள்ளி காப்புக்காட்டில், 2 கி.மீ., அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு நடவு செய்யப்-பட்ட பல இன மரங்களையும், அதன் முக்கியத்-துவத்தையும் வனத்துறையினர் விளக்கி கூறினர்.மாணவர்களுக்கு உணவு மற்றும் நோட்டு புத்த-கங்கள் வழங்கப்பட்டன. முகாமில், வனவர்கள் விவேகானந்தன், சுருதி மற்றும் வனக்காப்பா-ளர்கள் ஹேமசுந்தர், தேவகி, கார்த்திகேயன், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ