பச்சரிசி அரவை முகவர்கள் நலச்சங்க ஆலோ-சனை கூட்டம்
தர்மபுரி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக, பச்சரிசி அரவை முகவர்கள் நலச்சங்க, மாநில ஆலோ-சனை கூட்டம், தர்மபுரி அடுத்த குண்டலப்பட்-டியில் நேற்று நடந்தது. தலைவர் ராமகி-ருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில செய-லாளர் பாஸ்கர் பேசினார். சென்னை, திரு-வள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி என, 4 மண்டலம் வாரியாக, 12 மாவட்டங்களை பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர். இதில், அரிசி அனுப்பிய தேதியை கணக்கிட்டு காலதாமத கட்டணம் பிடிக்க வேண்டும். அரசு வழங்கும் பொது வினியோக திட்டத்திற்கான அரிசி மிக தரமாக இருக்க வேண்டும். எங்களின் வங்கி உத்திரவாதத்தில் அரசு நிர்ணய விலையில், 90 சதவீதம் தான் நெல் வழங்கப்படுகிறது. நெல் அரவைக்கான மின் கட்-டணம் உயர்ந்துள்ளது. மேலும், தொழிலாளர்-களின் கூலி உயர்வு, அலுவலர்களின் சம்பள உயர்வு, இயந்திரங்களின் பழுது மற்றும் தேய்-மானம், உதிரி பாகங்கள் விலை உயர்வு என, செலவுகள் மிக அதிகமாக உள்ளது. எனவே, அரவை கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். காலி கோணி பைகளை, டிபாசிட் செய்தால்தான், அரவை பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, அரவை பட்டியலை உடன் வழங்க ஏற்பாடு செய்து உத்தரவிட வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு-றுத்தப்பட்டன.