சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துாரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிலை வாரச்சந்தை நடக்கிறது. இங்கு கடந்த வாரம், 128 கட்டுகள் கொண்ட, ஒரு மூட்டை வெற்றிலை ஆரம்ப விலை, 10,000 ரூபாய் முதல், 20,000 ரூபாய் வரை விற்றது. நேற்று ஆரம்ப விலை, 10,000 முதல், 18,000 வரை விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் கடந்த வார்த்தை விட, 2,000 ரூபாய் குறைந்து விற்றது. நேற்று, 4.32 லட்சம் ரூபாய்க்கு வெற்றிலை விற்பனையானது.