பாரதிதாசன் பிறந்த நாள் விழா
அரூர்:பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு அரூர் நகர, தி.மு.க., செயலாளர் முல்லை ரவி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், டவுன் பஞ்., துணைத்தலைவர் தனபால், தி.மு.க., நிர்வாகிகள் ராஜேந்திரன், கிருஷ்ணகுமார், விண்ணரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.