மேலும் செய்திகள்
ஆட்டோவில் 'வீலிங்' செய்தவருக்கு வலை
28-Sep-2024
தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்யும் ரோமியோக்கள்தர்மபுரி, அக். 20-தேசிய நெடுஞ்சாலையில், பெண்கள் கல்லுாரி பஸ்கள் முன், பைக் வீலிங் செய்யும் ரோமியோக்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில், பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சில இளைஞர்கள் அவ்வப்போது, மாலை மற்றும் இரவு நேரங்களில் பைக்கில் வீலிங் செய்து வருகின்றனர். இது குறித்து, தகவலறிந்த போக்குவரத்து போலீசார் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிலையில், பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தடங்கம் மற்றும் அதியமான்கோட்டை - ஓசூர் புதிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம், சோகத்துார் ஆகிய இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பலர் பைக் வீலிங் செய்து, அதை ரீல்ஸ் மோகத்தால், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இதை பார்க்கும் மற்ற இளைஞர்களும் அதே இடத்தில், பைக் வீலிங் செய்ய தினந்தோறும் வருகின்றனர். மேலும், பெண்கள் கல்லுாரி பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது, அதனருகில் பைக்கில் வீலிங் செய்து பஸ்களை உரசுவது போல் பைக்கை ஓட்டுவது அதிகரித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் காரணமாக, சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து விதிகளை மீறி, விபத்தை ஏற்படுத்தும் வகையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ரோமியோக்கள் மீது, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
28-Sep-2024