உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், கடத்துார், பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம், தென்கரைகோட்டையில் ஒன்றிய தலைவர் ரீட்டா சிற்றரசு தலைமையில் நடந்தது. பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன், மாவட்ட செயலாளர் வித்யா கோபி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் கோபி வரவேற்றார். மாவட்ட தலைவர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள, 43 ஓட்டுச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி அமைப்பது, 'வாட்ஸாப்' குழு ஏற்படுத்துவது பொறுப்பாளர் நியமிப்பது குறித்து, ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், நிர்வாகிகள் ஜெகநாதன், பேச்சுமுத்து, முருகன், கண்ணையன், குமரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிர்வாகி அன்பரசு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி