உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பா.ஜ., தேசியக்கொடி பேரணி

பா.ஜ., தேசியக்கொடி பேரணி

பாப்பிரெட்டிப்பட்டி இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து, கடத்துார் கிழக்கு ஒன்றிய, பா.ஜ., சார்பில், தேசியக்கொடி பேரணி நடந்தது.பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக, இந்திய ராணுவம் மேற்கொண்ட, 'சிந்துார் ஆப்ரேஷன்' நடவடிக்கையில் வெற்றி பெற்று, இதற்கு காரணமான ராணுவ வீரர்களை பாராட்டும் விதமாகவும், பிரதமருக்கு நன்றி தெரிவித்தும், பா.ஜ., சார்பில் இராமியம்பட்டியில் தேசியக்கொடி பேரணி நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய பேரணிக்கு, பா.ஜ., கடத்துார் கிழக்கு ஒன்றிய தலைவர் சிற்றரசு தலைமை வகித்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன் துவக்கி வைத்தார். மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன், நிர்வாகிகள் சிவம், ஜெகதீஷ், பேச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டு, தேசியக்கொடியை கையில் ஏந்திய, பேரணியாக சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி