உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்

அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்

அரசு கல்லுாரியில்ரத்த தான முகாம்பாலக்கோடு, அக். 18-தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. முகாமை வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு, கல்லுாரி முதல்வர் முனைவர் தீர்த்தலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, மாவட்ட ரத்த வங்கி மருத்துவர் கன்யா, சுகாதார ஆய்வாளர் இளவரசு உள்ளிட்ட மருத்துவ குழுவினர், முகாமில் ரத்தம் வழங்குபவர்களை பரிசோதனை செய்து, ரத்தம் வழங்குவதற்கான உரிய உடல் பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாமில், கல்லுாரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் என மொத்தம், 120 பேர் ரத்த தானம் வழங்கினர். ரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்ட முகாம் சார்பில், கேடயம் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை, கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், ரமேஷ் மற்றும் அன்பரசு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை