பஸ் கண்டக்டர் வாகனம் மோதி சாவு
பென்னாகரம்:பென்னாகரம் அருகே, மடம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 65; தனியார் பஸ் கண்டக்டர். இவர், தமிழக கட்டட தொழிலாளர் சங்கத்தின் பென்னாகரம் ஒன்றிய தலைவராகவும் பணியாற்றி வந்தார். கடந்த, 28ல், தன் பைக்கில் தர்மபுரி நோக்கி சென்றுள்ளார். அப்போது வண்ணாத்திப்பட்டி அருகே, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. படுகாயமடைந்த அவர் தர்மபுரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.