சரக விளையாட்டு போட்டிகள் கடத்துார் மகளிர் பள்ளி சாம்பியன்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான குழு மற்றும் தடகள போட்டிகள், வெங்கடசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் கடத்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், சூப்பர் சீனியர் கோ-கோ, சீனியர் கபடி ஆகியவற்றில் முதலிடம் பிடித்தனர். ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் வாலிபால், சூப்பர் சீனியர் எறிபந்து, கபடி, கேரம் ஆகியவற்றில் இரண்டாமிடம் பெற்றனர். தடகள போட்டிகளில், 118 புள்ளிகளை பெற்று தொடர்ந்து, 17வது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். சீனியர் பிரிவில் பவ்யா, 800 மற்றும், 3,000 மீ., ஓட்டம், கம்பு ஊன்றி உயரம் தாண்டும் போட்டி என, 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, தனிநபர் சாம்பியன் பட்டத்தை வென்றார். சாதனை படைத்த மாணவியரையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேந்திரன், தென்றல் ஆகியோரை, தலைமையாசிரியை அழகம்மாள். பி.டி.ஏ., தலைவி அம்பிகா, பள்ளி மேலாண்மை குழு தலைவி கலைச்செல்வி மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.