மேலும் செய்திகள்
ஒகேனக்கல்லில் சிலை கரைக்க முன்னேற்பாடு
27-Aug-2025
பென்னாகரம், பென்னாகரம் அருகே உள்ள கள்ளிபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் முனிராஜ், 35. இவர், கார்ப்பென்டராக பணியாற்றி வருகிறார். கடந்த, 29ல் தனக்கு சொந்தமான மொபட்டில் கே.குள்ளாத்திரம்பட்டிக்கு பணிக்கு சென்றுள்ளார். பிறகு வீடு திரும்பும்போது ஒகேனக்கல் பென்னாகரம் பைபாஸ் ரோட்டில் சாலை ஓரமாக, மின்கம்பத்தில் பென்னாகரம் மின்வாரிய ஊழியர்கள் இருவர் பணியாற்றி கொண்டு இருந்தனர். அப்போது சாலையில், முனிராஜ் வருவதை பார்க்காமல் மின்கம்பியை துண்டித்துள்ளனர். துண்டிக்கப்பட்ட மின்கம்பி முனிராஜ் மீது விழுந்ததில் அவர் காயமடைந்து, பென்னாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார் படி, அஜாக்கிரதையாக மின்கம்பியை துண்டித்து விபத்து ஏற்படுத்தியதாக, 2 பேர் மீதும், பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
27-Aug-2025