உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் கவலை

மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் கவலை

அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு, அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, மாம்பாடி, வேட்ரப்பட்டி, மொரப்பூர், செட்ரப்பட்டி, கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், 30,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்திருந்தனர். கடந்த, 4 மாதங்களாக மரவள்ளிகிழங்கு அறுவடை நடந்து வரும் நிலையில், தற்போது, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மரவள்ளி கிழங்கு விலை தொடர்ந்து சரிந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: பொங்கலுக்கு முன், மரவள்ளிகிழங்கு டன் ஒன்று, 6,000 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து இடைத்தரகர்கள் கொள்முதல் செய்தனர். அதன்பின், படிப்படியாக விலை குறைந்து, தற்போது, 5,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி