மேலும் செய்திகள்
இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு; சிசு கொலையா?
13-Jul-2025
அரூர், தர்மபுரி மாவட்டம், சித்தேரி பஞ்., பேரேரியை சேர்ந்தவர் மாதேஷ், 27, விவசாயி; இவரது மனைவி அனிதா, 26. இவர்களுக்கு இதழினிகா என்ற, 7 மாத பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு அனிதா தனது குழந்தையை கையில் வைத்திருந்தார். அப்போது, கிணற்றின் அருகில் இருந்த மாட்டு கொட்டகையில் இருந்து, வெளியில் வந்த மாட்டை அனிதா பிடிக்க சென்ற போது, நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில், அனிதாவின் கையில் இருந்த குழந்தை தவறி கிணற்றில் விழுந்தது. இதில் பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Jul-2025