உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / லாரியிலிருந்து தவறி விழுந்த கிளீனர் சாவு

லாரியிலிருந்து தவறி விழுந்த கிளீனர் சாவு

தொப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஆரிபூசாரி கொட்டையை சேர்ந்தவர் மணி, 39. இவர் கிருஷ்ணகிரியில் உள்ள கல்குவாரியில், வேலி கல் லோடு ஏற்றும் லாரியில் கிளீனராக வேலை செய்து வந்தார். கடந்த, 20 அன்று வேலி கல் லோடு லாரியை, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் ஓட்டிச்சென்றார். லாரி தர்மபுரி மாவட்டம், வெள்ளக்கல் - ஜருகு சாலையில் அதிகாலை, 2:20 மணிக்கு சாலையின் வளைவில் திரும்பியபோது, லாரியிலிருந்த மணி, தவறி சாலையில் விழுந்து காயமடைந்தார். அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் நேற்று முன்தினம் காலை, 9:55 மணிக்கு இறந்தார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி