உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கலெக்டர் பங்களா சுற்றுச்சுவரில் கன்டெய்னர் லாரி மோதி விபத்து

கலெக்டர் பங்களா சுற்றுச்சுவரில் கன்டெய்னர் லாரி மோதி விபத்து

நல்லம்பள்ளி, டிச. 22-அதியமான்கோட்டை அருகே மாவட்ட கலெக்டர் பங்களா உள்ளது. நேற்று பெங்களூருவில் இருந்து, தர்மபுரி-க்கு கார் லோடு ஏற்றிய கன்டெய்னர் லாரி புறப்பட்டது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மன்சூர், 25, என்பவர் ஓட்டினார். லாரி நேற்று மாலை, தர்மபுரி கலெக்டர் பங்களா சாலையிலுள்ள ஷோரூமில் கார்களை இறக்க வந்தது. சாலை வளைவில் லாரியை டிரைவர் திருப்பியபோது, கலெக்டர் பங்களா முன்பக்க சுற்றுச்சுவரில் லாரி மோதியது. இதில், சுற்றுச்சுவர் சேதமடைந்தது. அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி