உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சமையல் எண்ணெய் மறுசுழற்சி விழிப்புணர்வு

சமையல் எண்ணெய் மறுசுழற்சி விழிப்புணர்வு

தர்மபுரி:தர்மபுரி நகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார் தலைமையில், தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் ஓட்டல், துரித உணவகங்கள் மற்றும் சமையல் எண்ணெய் பலகாரங்கள், இனிப்பு, சிப்ஸ் செய்யும் தயாரிப்பு நிறுவனங்களில் விழிப்புணர்வு செய்து, துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இது குறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கைலாஷ்குமார் தெரிவித்ததாவது:தர்மபுரி மாவட்டத்தில், உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் கொள்முதல் செய்து, அதற்கு உண்டான தொகையை தரம் வாரியாக ஒரு லிட்டருக்கு, 50 முதல், 60 ரூபாய் வரை உடனடி பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதில், சென்னை கேர்வெல் எனர்ஜி, அரூர் கே.பி.எம்., எனர்ஜி, கோவை ரிகோ எனர்ஜிஸ், திருப்பூர் பயோ ரிப்னரிஸ் என, 4 நிறுவனங்கள் மட்டும் தர்மபுரி மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. உபயோகப்படுத்தி மீதமாகும் எண்ணெய்யை வாங்கி, அந்நிறுவனங்கள் பயோடீசல் பயன்பாட்டிற்கு தயாரிக்க பயன்படுத்துகின்றனர். இவர்களை தவிர்த்து, வேறு நிறுவனங்கள் எண்ணெய் வேண்டி வந்தால், வணிகர்கள் அவர்களை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர்தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை