மேலும் செய்திகள்
மா.கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்
31-Oct-2026
பாலக்கோடு; தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா கொலசன அள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கிராமங்களில், வசிக்கும் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மா. கம்யூ., கட்சி சார்பில், கொலசனஅள்ளி வி.ஏ.ஓ., அலுவலகம் முன், கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கொலசனஅள்ளி பஞ்.,ல் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். ஏழை மக்களுக்கு வங்கி மூலமாக கடன் உதவி வழங்க வேண்டும். வேப்பலஅள்ளியில் வீடு இல்லாத மக்களுக்கு தமிழக அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் வீடுகளை ஒதுக்கிட வேண்டும். மேலும், சாக்கடை கால்வாய், தெருக்களுக்கு சிமென்ட் சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். கொலசன அள்ளி பஞ்.,ல் டெங்கு காய்ச்சல் தாக்கம் உள்ளதால் சுகாதாரத் துறை, இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பஞ்., நிர்வாகம் சார்பில், சிசிடிவி, கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
31-Oct-2026