மேலும் செய்திகள்
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
04-Oct-2025
கம்பைநல்லுார், கம்பைநல்லுார் அருகே பட்டாசு கடைக்கு பூட்டு போட்ட பா.ஜ.,வை சேர்ந்த டவுன் பஞ்., கவுன்சிலர் உள்ளிட்ட, 8 பேரை போலீசார் கைது செய்து, விடுவித்தனர்.தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த பூமிசமுத்திரத்தை சேர்ந்தவர் சின்னதுரை, 60, இவர் அதேப் பகுதியில் பட்டாசு தயாரிப்பு குடோன் மற்றும் விற்பனை நிலையம் நடத்தி வந்தார். அங்கு, கடந்த பிப்., 24ல் ஏற்பட்ட வெடி விபத்தில் வேலை செய்து கொண்டிருந்த கம்பைநல்லுார் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த திருமலர், 32, திருமஞ்சு, 30, செண்பகம், 33, ஆகிய, 3 பெண்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, பட்டாசு தயாரிக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை, 8:30 மணிக்கு சின்னதுரையின் பட்டாசு விற்பனை நிலையத்திற்கு வந்த கம்பைநல்லுார் டவுன் பஞ்., கவுன்சிலர் கிருஷ்ணன், 55, இங்கு பட்டாசு விற்பனை செய்யக்கூடாது, ஏற்கனவே வெடி விபத்து நடந்துள்ளது. அருகில் உள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி கடைக்கு பூட்டு போட்டு சென்றுள்ளார்.கம்பைநல்லுார் போலீசார், கிருஷ்ணன், அவரது மகன் லோகேஷ், 32, தர்மபுரி மாவட்ட, பா.ஜ., இளைஞரணி தலைவர் உள்ளிட்ட, 8 பேரை கைது செய்து, கம்பைநல்லுாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் வடுவித்தனர்.கிருஷ்ணன் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார். தற்போது, பாஜ.,வில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
04-Oct-2025