உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க., துண்டு அணிந்து பள்ளி விழாவில் நடனம்; நடவடிக்கை பாயுமா?

தி.மு.க., துண்டு அணிந்து பள்ளி விழாவில் நடனம்; நடவடிக்கை பாயுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி : பள்ளி ஆண்டு விழாவில், தி.மு.க., கட்சி துண்டு அணிந்து, மாணவர்கள் நடனமாடிய வீடியோ பரவி வருகிறது.தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த, 21ல் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. அப்போது, மாணவர்களின் பெற்றோர், பள்ளி மேலாண்மை குழுவினர், உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் என, பலர் பங்கேற்றனர். இதில், மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியில், ரஜினி பாடலுக்கு, மாணவர்கள் நடனமாடினர். அப்போது, தர்மபுரி நகராட்சி, 9வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் மாதேஸ்வரன் மேடை ஏறி நடனமாடியதுடன், தான் அணிந்திருந்த, தி.மு.க., கட்சி துண்டை மாணவர்களுக்கு அணிவித்து ஆடினார். இந்த வீடியோ நேற்று பரவியது.சில வாரங்களுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி ஆண்டு விழாவில், பா.ம.க., துண்டை பள்ளி மாணவர்கள் அணிந்து நடனமாடிய சம்பவத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், தி.மு.க., துண்டு அணிந்து பள்ளி ஆண்டு விழா மேடையில் நடனமாடியது குறித்து, நடவடிக்கை பாயுமா என, கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

B MAADHAVAN
மார் 24, 2025 20:24

தீயமுக துண்டு அணிந்து ஆடினால், ஆடியவருக்கும் சரி, அரசின் பேச்சுக்கு தலையாட்டி ஆடும் தலைமை ஆசிரியருக்கும் சரி... பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட வாய்ப்பு உண்டு.


Bhaskaran
மார் 24, 2025 07:40

கண்டிப்பாக விருது உண்டு


Mani . V
மார் 24, 2025 05:01

ஒரு மண்ணாங்கட்டியும் பாயாது. இங்கு நடப்பது எந்தக் கொம்பனும் குறை சொல்லவே முடியாத எழவு மாடல் ஆட்சி. குறை சொன்னால் இருக்க முடியாது என்பது தனிக்கதை.


Kasimani Baskaran
மார் 24, 2025 03:55

பெரியார் மட்டும் இல்லை என்றால் இந்தியாவுக்கு சுதந்திரமே கிடைத்து இருக்காது, வீரமணிதான் சிறந்த ஆசிரியர் என்று சொல்லிக்கொடுக்காமல் இருந்தால் நல்லது..


முக்கிய வீடியோ