உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வனத்திலிருந்து வழி தவறி வந்த மான் பலி

வனத்திலிருந்து வழி தவறி வந்த மான் பலி

பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 15---தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சேர்வராயன் மலை பகுதியில் இருந்து, நேற்று காலை வழிதவறி, 4 வயது ஆண் புள்ளிமான் பாப்பிரெட்டிப்பட்டி நகரத்தில் புகுந்தது. புள்ளிமான் அங்கும் இங்கும் ஓடி, பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள கம்பி முள்வேலியில் சிக்கி காயம் அடைந்தது.பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) பிரகாஷ் தலைமையில் வீரர்கள் மானை பிடித்து, வனவர் ராகுலிடம் ஒப்படைத்தனர். பின் மான் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.பாப்பிரெட்டிப்பட்டி வன அலுவலக வளாகத்தில், பிரேத பரிசோதனை செய்து அங்கேயே புதைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ