தி.மு.க., தேர்தல் வாக்குறுதியைநிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வரதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கோவிந்தசாமி, ஆறுமுகம், பழனிசாமி, சுப்பிரமணி சாந்தா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் ரத்தினவேல் கோரிக்கைகள் குறித்து பேசினார்.இதில், கடந்த, 2021ல் தி.மு.க., தேர் தல் வாக்குறுதியில் ஓய்வூதியர்களுக்காக செயல்படுத்தப்படும் என்ற அனைத்து அறிவிப்புகளையும், தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்சம், 7,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாவட்டந்தோறும் ஓய்வூதியர்களுக்கு பாதுகாப்பு இல்லம் உருவாக்க வேண்டும். ஓய்வூதியர் நல வாரியம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.